தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளாரா?

#SriLanka #Social Media #srilankan politics #Diaspora
Shelva
2 years ago
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளாரா?

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இறப்பும் அவரது குடும்பத்தினரது இறப்பும் போராட்டம் முடிவுற்ற காலத்தில் இருந்தே ஒரு சர்ச்சையாக இருந்து வருகின்றது. 

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது மனைவி மதிவதனியின் சகோதரி தனது தங்கை மற்றும் அவரது மகள் துவாரகா உயிருடன் இருப்பதாகவும் அவர்களை தான் பார்த்ததாகவும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது இது தொடர்பான செய்தி ஒன்றினை லங்கா4 ஊடகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. 

ஆனால் இந்த செய்தியானது விடுதலைப்போராட்டத்தில் போராடிய போராளிகள் அனைவரினது மனங்களினையும் மிகவும் பாதிப்படைய செய்துள்ளது. 

ஒரு தலைவனை நம்பி எத்தனையோ மாவீர்ர்கள், போராளிகள் தமது உயிர், உறவுகளினை தியாகம் செய்து இந்த மக்களுக்காக போராடினார்கள் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிந்த விடயம். 

அது மட்டுமன்றி போராடியவர்களில் ஏராளமானோர் மாவீரர்களாகியுள்ளனர், ஏராளமானோர் காணமல் போயுள்ளனர், சிலர் இலங்கை அரசாங்கத்தின் சிறைகளில் இன்னமும் சொல்லொணாத்துயரங்களினை அனுபவித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர், 

சிலர் புனர்வாழ்வழிக்கப்பட்டனர் என்ற பெயரில் மிகவும் துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். 

இந்த மண்ணையும் மக்களையும் நேசித்த ஒரு தலைவன் தன்னை நம்பி வந்த அனைவரயும் இப்படி நட்டாத்தில் தவிக்க விட்டுவிட்டு தான் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று மக்களின் மனங்களில் ஒரு தப்பான எண்ணத்தினை தோற்றுவிக்கும் நோக்கோடு சில அரசியல் நகர்வுகளில் பல ஊடகங்களினையும் விடுதலைப்போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புகளினை வைத்திருந்தவர்களினையும் பயன்படுத்தி ஒரு கண்ணுக்கு தெரியாத அமைப்பு தமது நடவடிக்கையினை சாமர்த்தியமாக அரங்கேற்றி வருகின்றது. 

ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சிலவற்றை மக்கள் வெறுத்து அதற்கு எதிராக தமது கருத்துக்களை வெளியிட அதனை விடுத்து புதிதான நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.

எமது போராட்டகாலத்தில் மிகவும் ஒரு நெருங்கிய தொடர்புகளை கொண்டவரும் பிரான்ஸில் உள்ள மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளருமான ச.வீ. கிருபாகரன் அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் "தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பது 100 வீதம் அல்ல 500 வீதம் உண்மை" என தனது தடித்த குரலில் கூறியுள்ளார். 

ஒரு மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர் இப்படி கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது. 

மேலும் அவர் தெரிவிக்கையில் தலைவர் உயிருடன் இருப்பது புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு பிரச்சினையாக இருப்பதாகவும் அவர்கள் ஒரு தப்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றதுமான கருத்தினை காரசாரமாக தெரிவித்துள்ளார். 

இலங்கை அரசாங்கமானது புலம்பெயர் நாடுகளில் இயங்கி வரும்(Diaspora) விடுதலைப்புலிகளின் அமைப்புக்களை தடை செய்து அதனை இல்லாமல் பண்ணுவதே தனது இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. 

அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே அவரது கருத்துக்களும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்று தரும் என்றும் அவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். 

இந்த கருத்தினை கேட்கும் போது ஒரு பழ மொழிதான் ஞாபகத்தில் வருகின்றது,

"கிணறு இருக்கும் போது தண்ணீர் கொடுக்காதவர், அது வற்றியவுடன் தண்ணீர் தருகின்றேன் என்பதைப்போல் உள்ளது" 

இதற்கெல்லாம் மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். 

ஒருவர் போக ஒருவர் வந்து இப்படியான கருத்துக்களை வெளியிட்டு இந்த போராட்டத்தினை ஒரு தப்பான போராட்டமாகவும், ஒரு தலைவன் இதனை வழி நடத்தியது தவறானது போன்றதுமான கருத்துக்களை திணிக்கவே இந்தமாதிரியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

தமிழ் மக்கள் அனைவருக்கும் இதன் உண்மை வடிவம் தெரியும், 

போராட்டங்களில் போராடிய எத்தனையோ போராளிகள் புலம்பெயர் நாடுகளில் இன்னமும் உயிருடன் உள்ளனர் அவர்கள் அனைவரும் அமைதியாகவே உள்ளனர். 

ஈழத்துக்காகவும் ஈழத்தின் விடிவுக்காகவும் போராடிய தலைவனும் போராளிகளும் என்றும் போற்றுதலுக்குரியவர்களே..

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!