பிரித்தானியாவில் 50,000 பவுண்டுகளை திருடிய இந்திய வம்சாவளி நபர்

#Arrest #Robbery #Britain #money
Prasu
2 years ago
பிரித்தானியாவில் 50,000 பவுண்டுகளை திருடிய இந்திய வம்சாவளி நபர்

பிரித்தானியாவில் தான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து 50,000 பவுண்டுகளை திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2017 ஜனவரியில் இருந்து 2018 ஜனவரிக்குள் நடந்துள்ளது. Thames Valley காவல்துறை இது தொடர்பாக விசாரித்த நிலையில் 62 வயதான சன்னி பயானிக்கு அய்ல்ஸ்பரி கிரவுன் நீதிமன்றம் அண்மையில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதோடு அவர் 565 பவுண்டுகளை தனியாக செலுத்தவும், மொத்தமாக 51,794.27 பவுண்டுகளை ஒரு மாதத்திற்கு 1,075 பவுண்டுகள் வீதம் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 பயானி, டீரீம்ஸ் லிமிடட்ட என்ற நிறுவனத்தில் நம்பிக்கைக்குரிய பதவியை வகித்தார், அதை தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதையடுத்தே காவல்துறையினரிடம் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!