லிபியாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையில் மோதல் - 45 பேர் பலி

வட ஆபிரிக்க நாடான லிபியாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையில் நடைபெறும் மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகா் திரிபோலியில் 444-ஆம் படைப் பிரிவு என்ற ஆயுதக்குழுவுக்கும் விசேட தற்காப்பு படை என்ற ஆயுதக்குழுவுக்கும் இடையில் கடந்த 15 ஆம் திகதி முதல் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த மோதல்களில் 146 போ் காயமடைந்துள்ளனா் என அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களின் விபரங்கள் வெளியாகவில்லை.
444-ஆம் படைப் பிரிவின் தளபதியாக முஹமட் ஹம்ஸாவை விசேட தற்காப்புப் படையினா் திரிபோலி விமான நிலையத்தில் கைது செய்தனர் என்ற தகவல் வெளியானதை அடுத்து இரண்டு குழுக்களுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது.
லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வந்த முஹம்மர் கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கடந்த 2011 ஆம் ஆண்டு கவிழ்த்தனா்.
இதன் போது கிளர்ச்சி படையினர் கடாஃபிiய கொலை செய்தனர்.
கடாஃபியை கொலை செய்து ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் தொடர்ந்தும் மோதல்கள் நடந்து வருகின்றன.



