உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் - ஆஸ்திரேலியா

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடன் வெளியேற வேண்டும் என்று லேபர் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான வெயின் ஸ்வன் (Wayne Swan) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யாவின் ஏதேச்சதிகார போருக்கு ஆதரவு வழங்குவதை பெலாரஸ் நாடு நிறுத்த வேண்டும் எனவும் அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். " ஆஸ்திரேலியா உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும்.
அந்நாட்டவர்களின் போராட்டம் எமது போராட்டமாகும். அவர்கள் உக்ரைனில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடுகின்றனர்." எனவும் Wayne Swan குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொழிற்கட்சியின் தேசிய மாநாட்டில் பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்ய - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென இந்தியாவும் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார நெருக்கடியை தணிக்க இந்த போர் விரைவாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இருநாடுகளும் சமரசமான பேச்சுகளை முன்னெடுக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும் இந்தியா கூறியுள்ளது.



