பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தானில் மந்திரி பதவி

#Women #Pakistan #Minister #Terrorist #wife
Prasu
2 years ago
பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தானில் மந்திரி பதவி

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக். காஷ்மீர் பிரிவினைவாதியான இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

யாசின் மாலிக் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான பல வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளார். 

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார்.

2019 இல் கைது செய்யப்பட்டு பின்னர் மே 2022 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் காபந்து அரசில் புதிதாக நியமிக்கப்பட்ட தற்காலிகப் பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரின் மந்திரி சபையில் யாசின் மாலிக்கின் மனைவி முஷல் ஹுசைன் முல்லிக் மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி வியாழக்கிழமை அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

16 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். பாகிஸ்தானின் மனித உரிமைகள் மந்திரியாக யாசினின் மனைவி முஷல் ஹுசைன் முல்லிக் நியமிக்கப்பட்டு உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!