மாஸ்கோவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் டிரோன் விமானம்
#Attack
#War
#Drone
#Russia Ukraine
Prasu
2 years ago

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 541வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் இன்று அதிகாலை 4 மணியளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த டிரோனை மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ள வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், டிரோன் மாஸ்கோவில் உள்ள வர்த்தக மையம் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. அதேவேளை இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது.
டிரோன் தாக்குதலையடுத்து நுகோவா உள்பட 4 முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. மேலும், விமான சேவை பாதிக்கப்பட்டது.



