நாரஹேன்பிட்டியில் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை கைது!
#SriLanka
#Arrest
#Lanka4
Thamilini
2 years ago
நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிலோ 294 கிராம் கொக்கேய்னுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை ஒருவரும், அதைப் பெற்றுக்கொள்ள வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள முக்கிய போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த போதைப்பொருட்களை பெற்றுக்கொள்ள வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 28 வயதான பிலிப்பைன்ஸ்நாட்டு பிரஜை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.