முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!

#SriLanka #Lanka4 #Face_Mask
Thamilini
2 years ago
முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!

ஹோமாகமவை அண்மித்த பகுதியில் உள்ள  குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

ஹோமாகம கைத்தொழில் பூங்காவில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் நேற்று (17.08) ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாசக் கோளாறுகளை குறைப்பதற்காகவே இந்த விசேட கோரிக்கையை அந்த பிரிவு முன்வைத்துள்ளது.

ஹோமாகம கைத்தொழில் பூங்காவில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோட்டே நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் ஹொரணை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!