பாராளுமன்ற குழு அறையில் தலையணைகள், மெத்தைகள் மீட்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்: செயலாளர் நாயகம்

#SriLanka #Parliament
Prathees
2 years ago
பாராளுமன்ற குழு அறையில் தலையணைகள், மெத்தைகள் மீட்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்: செயலாளர் நாயகம்

பாராளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். 

 மேற்கூறிய பிரச்சினையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு உரிய குழு உறுப்பினர்களை நேரில் சந்திக்கவோ அல்லது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அது தொடர்பான விஷயங்களைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

 சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் உதவி செயலாளர் நாயகம் ஆகியோருக்கு தகவல்களை சமர்ப்பிக்க முடியும் என உள்ளக சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் திருமதி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.

 சம்பந்தப்பட்ட குழுக்களின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்தவொரு அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!