கொழும்பில் தூதரக அதிகாரிகளை சந்தித்த அமைச்சர் அலி சப்ரி

#SriLanka #Ali Sabri #Lanka4
Kanimoli
2 years ago
கொழும்பில் தூதரக அதிகாரிகளை சந்தித்த அமைச்சர் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பணிகள் குறித்து, அமைச்சர் அலி சப்ரி, இராஜதந்திர சமூகத்தினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அமைச்சர் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

 காணாமல்போனோர் விடயம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், தான் தெளிவுபடுத்தியதாக, அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்ததாகவும் அவர் குறித்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் குறித்த அலுவலகம் ஊடாக, காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

 வெளிநாட்டு இலங்கையர்களுக்கான உத்தேச அலுவலகத்தை அமைப்பது குறித்தும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். பெண்கள் விவகாரம், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயல் திட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தின் அண்மைய முன்னேற்றங்கள் தொடர்பிலும் தான் வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளித்ததாக வெளிவிவார அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!