பாடசாலை மாணவர்கள் இருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு
#SriLanka
#Death
#Tamil Student
Prathees
2 years ago
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
இன்று (17ம் திகதி) எல்லே போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு இந்த மாணவர்கள் சென்றிருந்த நிலையில், அந்த போட்டியின் பின்னர் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 மற்றும் 15 வயதுடைய இரு பாடசாலை மாணவர்கள் மைதானத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு பாடசாலை மாணவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு சடலங்கள் வவினியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.