ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது!

#SriLanka #Arrest
Mayoorikka
2 years ago
ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது!

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று (16) எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கையர்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.

 இஸ்ரேலில் வேலைவாய்ப்பினை பெறுவதற்காக ஜோர்தான் -இஸ்ரேல் எல்லையில் சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாகப் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 கடந்த வருடம் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!