வவுனியாவில் வறட்சி காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

#SriLanka #Vavuniya #hot
Mayoorikka
2 years ago
வவுனியாவில் வறட்சி காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 450 குடும்பங்களை சேர்ந்த 1,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரூவான் ரட்நாயக்கா தெரிவித்துள்ளார்.

 வவுனியாவில் நிலவும் வறட்சி நிலைமை தொடர்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வறட்சியின் பாதிப்புக்கள் அதிகமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உணரப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுவதனால் குடிநீர் வழங்க தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!