தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

#India #Tamil Nadu #Tamil People #people #Rain #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (17.08.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4