நிதி கடன் சவாலை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவி செய்ய தயார்: சீனா
#SriLanka
#China
Mayoorikka
2 years ago
நிதிக் கடனின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் வெளியுறவு ஆணைக்குழுவின் அலுவலகத்தின் பணிப்பாளர் வொங் யீ, உறுதியளித்தார்.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் நடைபெறும் ஏழாவது சீன-தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சியில், இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தபோது வொங் யீ இந்த உறுதியை அளித்தார் சீனா எப்போதும் இலங்கையின் நம்பகமான மூலோபாய பங்காளியாக உள்ளது.
அத்துடன், இலங்கையும் எப்போதும் சீனாவுடன் நட்பாகவே இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் தேசிய கன்ணியத்தை பாதுகாப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் வெளியுறவு ஆணைக்குழுவின் அலுவலகத்தின் பணிப்பாளர் வொங் யீ தெரிவித்தார்