ஈராக்கில் வான்தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் பலி
#world_news
#Iraq
#Tamilnews
#ImportantNews
#Killed
Mani
2 years ago

ஈராக் நாட்டின் வடக்கு மாகாணமான கிர்குக் நகரில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிக அளவில் பதுங்கி இருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த தகவலை அறிந்த ஈராக் ராணுவம் அந்த நகரத்தின் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தது. அதன்படி ஈராக் ராணுவத்தின் போர் விமானங்கள் கிர்குக் நகரின் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. வெடிகுண்டுகள் வீசி சரமாரி வான்தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைத்திருப்பதாகவும் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



