நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் இராஜினாமா: வெளியாகிய காரணம்
அஸ்வசும நலன்புரி திட்டத்தை செயல்படுத்தும் சபையின் தலைவர் பி. விஜேரத்ன அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார். நலன்புரி பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை தொடர்பில் நாடு முழுவதும் பல எதிர்ப்புகள் எழுந்ததுடன் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் ஆட்சேபனைகளை சமர்ப்பித்திருந்தது.
தனது இராஜினாமா குறித்து பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க. விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய அவர், அதற்கான புதிய தலைவர் யார் என்பது குறித்து இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உயர்மட்ட பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், பி. விஜேரத்ன இராஜினாமா செய்துள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபையின் வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
நலன்புரி சபையில் இருந்து விலகிய விஜேரத்ன வேறு பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று அரசு வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த ராஜினாமா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நலன்புரி திட்டத்தின் முன்னாள் தலைவர் விஜேரத்ன தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.