வரலாற்றுச் சாதனை படைத்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு.

#SriLanka #Mannar #Vavuniya #School #Event #Lanka4
Kanimoli
2 years ago
வரலாற்றுச் சாதனை படைத்த  அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு.

வவுனியாவில் நடைபெற்று வரும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுகளில் சாதனை படைத்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை(16) காலை பாடசாலையில் இடம் பெற்றது. வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுகளில் எறிபந்து போட்டியில் மடு வலயத்திலிருந்து மன்/அடம்பன் மத்திய மகா வித்தியாலய 17 வயது பிரிவின் கீழ் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் 20 வயது பிரிவின் கீழ் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் பங்கு பற்றியிருந்தது.

images/content-image/1692200627.jpg

 இப்போட்டியானது கடந்த 13,14 ஆம் திகதிகளில் வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 20 வயது ஆண்கள் முதலாம் இடத்தையும், 17 வயது பெண்கள் இரண்டாம் இடத்தையும் 17 வயது ஆண்கள் மூன்றாம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மடு வலயம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையும் இவ்வேளையில் பாடசாலை ஒன்றிலிருந்து ஒரே குழு விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றி வடமாகாணத்தில் பலம்பொருந்திய பல அணிகளை தோற்கடித்து மூன்று அணிகள் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

images/content-image/1692200638.jpg

 குறித்த போட்டிகளில் பங்கு பற்றி சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (16) காலை அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்றது. பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.கே.வொலன்ரைன் கலந்து கொண்டார். சாதனை வீரர்கள் பவனியாக பாடசாலை வரை அழைத்து வரப்பட்டு வாத்திய இசையுடன் பாடசாலை மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர். இதன் போது பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள்,பெற்றோர்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். -இதன் போது சாதனை படைத்த மாணவர்கள் விருந்தினர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!