மியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுப்பது பரவலாக மேற்கொள்ளப்படும் தொழில் ஆகும். அதன்படி கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு அடியில் இருந்த இருவர் உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் 30 க்கும் மேற்பட்ட நபர்கள் நிலச்சரிவில் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர். தற்போது காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். அங்கு பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



