தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்குச் தப்பிச் சென்ற அமெரிக்க இராணுவ வீரர் பற்றி வெளியான தகவல்

எல்லையில் அத்துமீறி தென்கொரியாவில் இருந்து தப்பியோடிய அமெரிக்க இராணுவ வீரர் குறித்து முதல் முறையாக வடகொரியா தெரிவித்துள்ளது.
அதன்படி அந்த ராணுவ வீரர் தனது நாட்டுக்கு தஞ்சம் புகுந்துள்ளதாக வடகொரியா கூறுகிறது.
அமெரிக்காவில் மனிதாபிமானமற்ற வன்முறை மற்றும் இனப் பாகுபாடுகளில் இருந்து தஞ்சம் அடையும் வகையில் குறித்த இராணுவ வீரர் எல்லையை மீறியுள்ளதாக வடகொரியா மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் வடகொரியாவின் இந்த கருத்துக்கு அமெரிக்கா இதுவரை பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
அந்தந்த வீரர்கள் தற்போது வடகொரிய இராணுவத்தின் காவலில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அமெரிக்க இராணுவ வீரர் டிராவிஸ் கிங்இ தென்கொரியாவில் இருந்து எல்லையை கடந்து ஜூலை 18-ம் திகதி வடகொரியாவுக்கு வந்தார்.
அதன் பிறகு, அவர் குறித்து வடகொரியா வெளியிட்ட முதல் தகவல் இதுவாகும்.



