கைதி ஒருவரிடம் கைத்தொலைபேசியை வழங்கிய யாழ் சிறைக்காவலர் கைது
#SriLanka
#Jaffna
#Prison
Prathees
2 years ago
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரியும் சிறைக்காவலர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய அதிகாரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரிடம் அந்த அதிகாரி செல்போனை ஒப்படைத்ததாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை ஆய்வு செய்த போது குறித்த கைதிக்கு கைத்தொலைபேசி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.