இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

#SriLanka #Lanka4 # essential
Thamilini
2 years ago
இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. நாளை (17.08) முதல் அமுலுக்கு வரும் வகையில்09 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானித்துள்ளது.

இதன்படி400 கிராம் இலங்கை பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 970 ரூபாவாகும்.

அத்துடன் 1 கிலோ சோயா இறைச்சியின் (மொத்த விற்பனை) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 625 ரூபாவாகும்.

இதேவேளை, 1 கிலோ பாஸ்மதி அரிசியின் புதிய விலை 675 ரூபாவாகும், இது 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. பிரவுன் சர்க்கரையின் விலை கிலோ 350 ஆக குறைக்கப்பட்டுள்ளது

ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 325 ரூபாவாகவும், உளுந்து ஒரு கிலோ 555 ரூபாவாகவும், ஒரு கிலோ பூண்டு 630 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசியின் புதிய விலை 147 ரூபாவாக உள்ளதுடன், அதன் விலையை 2 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!