பெருந்தோட்டக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு புதிய வேலைத்திட்டம்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
Thamilini
2 years ago
இலங்கையில் தேயிலை உள்ளிட்ட பெருந்தோட்டக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அது நவீன டிஜிட்டல் தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய சிறந்த வடிவமைப்பாக இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கத்தின் 129வது வருடாந்த பொது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் பரந்த பங்களிப்பை வழங்குவதற்கு தேயிலை கைத்தொழில் துறைக்கு இன்னும் பலம் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்துறையில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்து புத்தாக்கத்துடன் தனது மாற்றத்திற்கு தயாராக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.