லிபிய தலைநகர் திரிபோலியில் பதற்றம் - 27 பேர் உயிரிழப்பு!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
லிபிய தலைநகர் திரிபோலியில் பதற்றம் - 27 பேர் உயிரிழப்பு!

லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு சக்திவாய்ந்த ஆயுதப் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 106 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  திங்களன்று 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சா, திரிபோலியின் முக்கிய மிட்டிகா விமான நிலையத்தின் வழியாக பயணிக்க முயன்றபோது, அவர் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சண்டை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தளபதி மஹ்மூத் ஹம்சார் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் திரிபோலியில் பதற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதேவேளை  திரிபோலியில் பாதுகாப்பு சம்பவங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!