சுவிட்சர்லாந்தில் ஒருவர் தனது பிள்ளைகளை பாரமரித்தல் எவ்வாறு?

#Switzerland #சுவிட்சர்லாந்து #சுவிஸ் #சுவிஸ்சர்லாந்து #Swiss
சுவிட்சர்லாந்தில் ஒருவர் தனது பிள்ளைகளை பாரமரித்தல் எவ்வாறு?

குழந்தை பிறந்த பின்பு தாய் தந்தை இருவருமே வேலை செய்யக்கூடிய நிலையில் இருப்பதால், பேர்ண் மாநிலம் பிள்ளைகளை பராமரிக்க சலுகைகளை வழங்குகிறது.

வேறுபட்ட சலுகைகள், உ+மாக பிள்ளைகள் பகல் பராமரிப்பிடம், பராமரிப்பு பெற்றோர் அல்லது பகல்பாடாசாலை. இதில் பெரும்பாலானவை கட்டணத்துக்குரியவை. 

எவர் பராமரிப்புசலுகைத்துண்டு பெறுகின்றார்களோ (Betreuungsgutscheine|bons de garde)அவர்கள் குறைவாக பணம் செலுத்துகிறார்கள்.

 குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம்

 பிள்ளைகள் பகல் பராமரிப்பிடத்தில் பகல் முழுவதும் குழந்தைகள் பாராமரிக்கப்படுவார்.(Kindertagesstätten|garderies) இங்கு 3 மாதம் தொடக்கம் பாடசாலை வரையுள்ள பிள்ளைகள் ( பாடசாலைக்கு முன்னும் பின்னும் மற்றும் மதியமும்) பராமரிக்கப் படுவார்கள். இங்கு இடம் கிடைக்க நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருப்பதால் பெற்றோர் இயலுமானவரை முன்கூட்டியே பதியவேண்டும்.

 இதற்குச் செலுத்தவேண்டிய கட்டணம் ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசப்படும். பெரும்பாலான வாழிட கிராமசபை செலவின் ஒரு பகுதியை பொறுப்பெடுக்கும். அவை பெற்றோருக்கு பராமரிப்பு சலுகை துண்டை கொடுக்கும். தேவைக்கேற்றபடி இவை நிரூபிக்கப்பட வேண்டும்.

 குழந்தைகள் பகல் நேரப் பராமரிப்பகம் அல்லது வதியும் கிராமசபை இங்கு பதியும் வசதிகளையும் கட்டணத்தையும் அறியத்தரும்.

 விளையாட்டுக் குழுக்கள்

 அதிகமான பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல முன்பு விளையாட்டுக் குழுக்களுக்குச் (Spielgruppe|Groupe de jeu) செல்கின்றனர். கிட்டத்தட்ட 3 வயதையடைந்த பிள்ளைகள் சேர்ந்து பெற்றோரின்றி ஒரு நிபுணத்துவம் பெற்ற பாதுகாப்பாளரின் கண்காணிப்புடன், விளையாடுதல் மற்றும் கைப்பணி போன்றவற்றைச் செய்வர்.

 விளையாட்டுக்குழுக்களுக்குச் செல்லுதல் அவரவர் விருப்பத்திற்குரியது. வீட்டிலே டொச் மொழி பேசாத பிள்ளைகள் விளையாட்டுக்குழுக்களுக்குச் செல்லும்போது , அங்கு டொச் மொழித் தொடர்புக்கு நல்ல வாய்ப்பாகிறது. 

அதனால் பாடசாலைக்குச் செல்லும்போது இலகுவாகிறது. அதிகமாக பல கிராமசபைகளில் விளையாட்டுக்குழுக்கள் இருப்பதுடன், வாழிட கிராமசபை தகவல்களை தெரிவிக்கிறது.

 நாள் கட்டமைப்பு / மதிய உணவு

 பாடங்கள் இல்லாத நேரங்களிலும் கூடச் சில பாடசாலைகள் பராமரிப்பை வழங்குகின்றன. இது பதிந்துள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்தது பாடசாலைகளில் நாள் கட்டமைப்பின்படி, உதாரணமாக பிள்ளைகள் மதியஉணவைப் பாடசாலையில் உண்டு மதியம் பாடசாலையில் தங்கலாம். பாடசாலை முடிய வீட்டுப்பாடங்கள் செய்ய உதவி செய்வார்கள்.

 பாடசாலை தொடங்க முதல் அவர்கள் ஏதாவது உண்ணலாம், விளையாடலாம். இந்தச் சலுகைக்குப் பெற்றோரிடம் கட்டணம் அறவிடப்படும். இக் கட்டணம் பெற்றோரின் வருமானத்திற்கு ஏற்ப வேறுபடும். பிள்ளை இச் சலுகையை ஒன்று அல்லது மேற்பட்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

 பராமரிப்புக்குடும்பம்

 பிள்ளைகளைப் பகலில் குறிப்பிட்ட நேரத்திற்குப் (அதிகமாகப் பகல் முழுவதும்) பொறுப்பெடுக்கும் குடும்பங்கள் (Tagesfamilien) பராமரிப்புக்குடும்பம் எனப்படும்.

 இந்த குழந்தைகளைப் பராமரிக்கும் வசதி தொழில் புரியும் பெற்றோருக்குத் தேவையானது. இதற்கென உள்ள முகவர் நிலையங்கள் தேடுபவரின் தேவைக்கேற்ப ஒரு குடும்பத்தை ஒழுங்குபடுத்தி வழமையான கட்டணத்தையும் அறியத்தருவர்.

 குழந்தையுடன் துணையாக இருப்பவர் / அவசர சந்தர்ப்பங்கள்

 சுவிஸில் அதிகமாக, இளையவர்கள்கூட மாலை நேரத்திலோ அல்லது வார இறுதி நாட்களிலோ குழந்தைகளுடன் துணையாக இருக்கும் தொழில் செய்வார்கள்.

 பேர்ண் சுவிஸ் செஞ்சிலுவைச்சங்கம் (SRK) இதற்கெனப் பயிற்சி பெற்று குழந்தைகளுடன் துணையாக இருப்பவர்களின் முகவர் நிலையப் பட்டியலை வைத்துள்ளது.

 இதில் பங்கெடுக்கும் இளையவர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். முன் திட்டமிடாத அவசர சந்தர்ப்பங்களில் திடீர் அவசரக்குழந்தைப் பராமரிப்பை சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் (SRK|CRS) செய்கிறது. உதாரணத்திற்கு பெற்றோரில் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து பிள்ளையைப் பார்க்க யாருமில்லாவிடின். இப்பராமரிப்புக்கு கட்டணம் அறவிடப்படும். சில மருத்துவக் காப்புறுதிகள் இச் செலவைப் பொறுப்பெடுக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4