கரைவலைகளுக்கு கீரி மீன்களை அள்ளும் மீனவர்கள்!

#SriLanka #Mannar #Fisherman #Lanka4
Kanimoli
2 years ago
கரைவலைகளுக்கு கீரி மீன்களை  அள்ளும் மீனவர்கள்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான மீன்களான வளையா சூரை கிளவல்லா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

images/content-image/1692174369.jpg

 இவ்வாறு மருதமுனை சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் கீரி இன மீன்கள் இன்று(15) அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறித்த கீரி மீன்களின் பெறுமதி 1 கிலோ சுமார் 400முதல் 500 வரை விற்பனையாவதுடன் இதேவேளை இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களினால் ஒரு மீனவரின் நாள் வருமானமாக 10 முதல் 20 இலட்சமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/1692174377.jpg

 தற்போது மருதமுனை கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான சிறிய பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதே வேளை கிளவால் வளையா சூரை போன்ற மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி வளையா மீன் 1 கிலோ 1600 ருபாவாகவும் கிளவால் 1 கிலோ 2000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!