2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து உறுதி!

#India #people #world_news #Smoke #England #ImportantNews
Mani
2 years ago
2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து உறுதி!

இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 நபர்கள் புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தப் பிரச்னையைக் குறைக்க அரசு பல்வேறு உத்திகளை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், புகைப்பழக்கத்தை கைவிடும்போது ஏற்படும் நன்மைகளையும் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் புகைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஸ்டீவ் பார்க்லே கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!