நேட்டோவில் இணைய உக்ரைன் சில தியாகங்களை செய்ய வேண்டுமா?
#world_news
#Ukraine
#War
#Lanka4
Dhushanthini K
2 years ago

உக்ரைன் கூட்டணியில் சேருவதற்கு ஈடாக அதன் சில நிலங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டர்ன் பேர்க்கிற்கு தலைமைப் பணியாளர்களிடமிருந்து பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.
"உக்ரைனைப் போலவே கூட்டணியும் அதன் பிராந்தியங்களை வர்த்தகம் செய்யாது என்று நாங்கள் எப்போதும் கருதுகிறோம்" என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஓலே நிகோலென்கோ தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் செயற்பாட்டையே தற்போது நேட்டோவும் பரிந்துரைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.



