ரணில்-சஜித் இணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்!

#SriLanka #Sajith Premadasa #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
ரணில்-சஜித் இணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்!

இந்த தருணத்தில் ரணில்-சஜித் இணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் முன்மொழிகின்றனர் என மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

 அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது என்றும்  அவர் தெரிவித்தார்.

 நாட்டின் எதிர்காலத்துக்காகவும் மக்களின் எதிர்காலத்திற்காகவும் ரணில்-சஜித் இணைந்து செல்ல வேண்டும் எனவும், அது நாட்டின் எதிர்காலத்திற்கான தேசிய தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேக போன்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி நகர்த்தும் வேலைத்திட்டத்தை முன்வைப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இனம், மதம், கட்சிகள் என பிளவுபடாமல் நாட்டை 25 வருடங்கள் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான தேசிய திட்டம் நாட்டுக்கு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!