ஹவாய் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

ஹவாய் பகுதியில் எரிந்துவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டிலேயே அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான தீவிபத்துகளில் ஒன்றாக குறித்த தீவிபத்து பதிவாகியுள்ளது.
குறித்த தீயில் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் திணைக்களம், பரிசோதனை அட்டவணைகள், எக்ஸ்ரே அலகுகள் மற்றும் இதர உபகரணங்களுடன், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.



