தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்!
#SriLanka
#Lanka4
Dhushanthini K
2 years ago

தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மொஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷலாங்ஃபு மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 'தைவானுடன் சீனாவைக் கட்டுப்படுத்த' முயற்சிப்பது தோல்வியில் முடிவடையும் எனத் தெரிவித்துள்ளார்.
தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக கருதும் சீனா அதிகாரத்தை பயன்படுத்தியேனும் அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், இதற்கு தடையாக தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே அமைச்சர் மேற்படி அறிவித்துள்ளார்.



