கொழும்பில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
#SriLanka
#drugs
Prathees
2 years ago
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனசல பிரதேசத்தில் வடமேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (15) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் 1 கிலோ 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (16) அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 5 முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.