பொதுதேர்வுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!
#SriLanka
#exam
#Lanka4
Thamilini
2 years ago
2022ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 100 நிலையங்களில் நடத்தப்பட உள்ளதாக அதன் பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டார். "
இந்தத் தேர்வுக்கு 472,554 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், கிட்டத்தட்ட 2.6 மில்லியன் விடைத்தாள்கள், அதாவது கிட்டத்தட்ட 90 சதவீதமானவை இந்த கட்டத்தில் மதிப்பீடு செய்யப்படவுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
27,500 ஆசிரியர்கள் இதற்கான விடைகளை அளித்துள்ளதாவும்,பள்ளி விடுமுறை நாட்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.