பிரசவத்தின் போது சிசு உயிரிழந்தது அலட்சியத்தால் அல்ல - அனுராதபுரம் வைத்தியசாலை பணிப்பாளர்
#SriLanka
#Hospital
#Anuradapura
Prathees
2 years ago
பிரசவத்தின் போது ஏற்பட்ட அதிக அழுத்தத்தினால் குழந்தை வழுக்கி விழுந்ததாக அநுராதபுரம் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் பிரசவத்தின் போது குழந்தையொன்று தரையில் விழுந்து உயிரிழந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த தாயை படுக்கையில் இருந்து தள்ளுவண்டிக்கு ஏற்றிய போது இந்த பிரசவம் இடம்பெற்றதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கும் தாய்க்கும் இடைப்பட்ட தொப்புள் கொடி சுமார் ஒரு அடி அளவுக்கு உடைந்துள்ளது என்றும் அலட்சியத்தால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது என்றும் சொல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.