ஹவாய் காட்டுத் தீ - பலி எண்ணிக்கை 93ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மவுயி தீவு நகரமான லஹைனாவின் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தீவிலிருந்து வெளியேறியுள்ளதுடன் இந்த தீயால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீ நகரின் மற்ற பகுதிகளுக்கு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால் பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
தற்போது தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து இருப்பதால் இயல்பு நிலை திரும்ப பல ஆண்டுகள் ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



