இலங்கை வீரர் சேனநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல தடை

#Srilanka Cricket #Ban #Player
Prasu
2 years ago
இலங்கை வீரர் சேனநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் செனனாயகே. 38 வயதான இவர் 2012 முதல் 2016 வரையில் 49 ஒருநாள் போட்டி, ஒரு டெஸ்ட் மற்றும், 24 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

செனனாயகே கடந்த 2020-ம்ஆண்டு இலங்கை பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டு செனனாயகே 3 மாதம் வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டு உள்ளது. 

இதுதொடர்பான உத்தரவை குடியேற்றம் மற்றும் குடியமர்வு பிரிவு பொதுக் கட்டுப்பாட்டாளர் துறைக்கு அனுப்பியுள்ளது.

இந்த உத்தரவு கிடைத்து உள்ளதாக இலங்கை அட்டர்னி ஜெனரல் பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் செனனாயகே மீது சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையின் பேரில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் பிரிவுக்கு உத்தரவை கோர்ட்டு அனுப்பியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!