கருவாப்பட்டை அபிவிருத்திக்காக புதிய திணைக்களத்தை நிறுவுவதற்கு தீர்மானம்
#SriLanka
#Export
#Lanka4
#Import
Kanimoli
2 years ago
கருவாப்பட்டை அபிவிருத்திக்காக புதிய திணைக்களத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கருவாப்பட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு தேவையான வசதிகளை வழங்குதல், கறுவாப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல், பெறுமதி சேர்த்தல் மற்றும் பொருட்களை பல்வகைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு கருவாப்பட்டை உற்பத்தியாளர்கள்,
விநியோகஸ்தர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக கறுவா அபிவிருத்தி திணைக்களம் என்ற புதிய திணைக்களத்தை ஜனாதிபதி ரணில் நிறுவவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.