கற்கள் மற்றும் ஹெல்மெட்களால் தாக்கப்பட்டு 4 பொலிஸார் வைத்தியசாலையில்
பெந்தோட்டை பிரதேச சபை மைதானத்தில் கடந்த 13 ஆம் திகதி இரவு இடம்பெற்ற திருவிழாவின் இறுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விசாரிக்கச்சென்ற பெந்தோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கற்கள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது நான்கு உத்தியோகத்தர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் பெந்தோட்டை பொலிஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சய ராஜபக்ஷவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வைத்தியசாலைக்கு தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் 7 இளைஞர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.