தனிநபர் பிரேரணைகள் சட்டமாக்கப்படும் பட்சத்தில் மீள கேள்வி எழுப்பும் வாய்ப்பும் இருக்க வேண்டும்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
தனிநபர் பிரேரணைகள் சட்டமாக்கப்படும் பட்சத்தில் மீள கேள்வி எழுப்பும் வாய்ப்பும் இருக்க வேண்டும்!

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் கொண்டுவரப்படும் பிரேரணைகள் சட்டமாக்கப்படுவதற்கு பல படிநிலைகளை கடக்க வேண்டும் என்றும்,அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமொன்று குறித்து மீள கேள்வி எழுப்பும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சிறப்புரிமை பிரேரணை மற்றும் இது தொடர்பாக சபாநாயகர் வழங்கிய தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்திருந்தமையையும் சுட்டிக்காட்டினார். 

இதன் பிரகாரம்,நீதிமன்றங்கள் தேவையில்லை என யாராவது பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால் என்ன நடக்கும் என எரான் விக்கிரமரத்ன இதன் போது கேள்வி எழுப்பினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!