சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களும் விடுவிக்கப்படும்!
#SriLanka
#Lanka4
#Ranjith Siambalapitiya
Thamilini
2 years ago
இறக்குமதி தடைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து வகையைச் சேர்ந்த வாகனங்களை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவை பொது போக்குவரத்துக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதன்படிசுங்கப் பத்திரம் வழங்கப்படாத வாகனங்களை, சிஐஎஃப் பெறுமதியில் 30% வரி செலுத்தியதன் பின்னர், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் பின்னரே குறித்த வாகனத்தை விடுவிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.