யாழில் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது தாக்குதல்!

#SriLanka
Mayoorikka
2 years ago
யாழில் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

 கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் ஜன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கெமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 வெளிநாட்டில் உள்ள தரப்பே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி குறித்த வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 கல்வியங்காட்டில் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் குற்றவாளிகளோ? வன்முறைக் கும்பலோ? இதுவரை கைது செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!