அசானிக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொடுக்கும் TCT அறக்கட்டளை தியாகி ஐயா

#SriLanka #Jaffna #Lanka4
Kanimoli
2 years ago
அசானிக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொடுக்கும் TCT அறக்கட்டளை தியாகி ஐயா

தென்னிந்திய தொலைகாட்சியில் இடம்பெறும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற பெருந்தோட்ட தொழிலாளியின் மகளான அசானி திறமைகளை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகிறார். வானொலியில் பாட்டு கேட்டு பாட பழகிய அசானியின் திறமையை அறிந்து கொண்ட குடும்பத்தினர் அவர் பாடும் காணொளியை சரிகமப நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ளனர்.

 பாடல் நிகழ்ச்சிக்கு தேர்வான நிலையில், சரிகமப குழுவினர் மெகா ஓடிஷனில் பங்கேற்க சென்னை வர அழைத்துள்ளனர். ஆனால் வசதி வாய்ப்பு இல்லாத இவர்கள் சென்னைக்கு வர தாமதமாகியுள்ளது. நிழ்ச்சிக்கு தாமதமான அசானி ஏமாமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது எனபதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் தன்னுடைய சிறப்பான குரலால் பாடி, அரங்கத்தை அசானி அதிர செய்துள்ளார் .

 அசானிக்கு TCT வணிக வளாக உரிமையாளரும் TCT பொது தொண்டு நிறுவனருமான கொடைக்கோன் தியாகி ஐயா அவர்கள் அசானி இலங்கைக்கு திரும்பும் போது வீடு ஒன்றை அமைத்து வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. வசதி படைத்த மக்கள் அனைவரும் இவ்வாறனான திறமை இருந்தும் வறுமையில் வாழுவோருக்கு உதவ முன்வர வேண்டும். இதை பார்த்து வசதி படைத்தவர்கள் தேவைப்படுவோரை இனம் கண்டு உதவ ஒரு முன் உதாரணமாக இருக்கவேண்டுமென lanka4 ஊடகம் கேட்டுக்கொள்கிறது. 

 இவ்வுதவிகளை தியாகி ஐயா அவர்கள் இனம், மதம், சாதி வேறுபாடின்றி சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இக்கால சூழலில் நாம் எமது உரிமைகளை மக்கள் ஒற்றுமையூடாக மாத்திரமே பெற முடியும். வெறும் துவேசம் பேசி அரசியலின் ஊடாக மட்டும் அல்லாமல் மூவின மக்களும் மக்களோடு மக்களாக புரிதலின் ஊடாக இலங்கையையே உலகின் உன்னத உச்ச நிலைக்கு கொண்டு வரமுடியும் என்பதற்கு இவ்வுதவிகளே அஸ்திவாரமாக இருக்கும். மேலும் உரிய உதவி தேவைப்படுபவர்கள் ஐயாவை அணுகினால் தேவை அறிந்து உதவ காத்திருக்கிறார். அவர் நீடூழி காலம் வாழ அனைவருக்கும் பொதுவான ஆண்டவனை பிராத்திப்போமாக.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!