டயானா கமகேவுடன் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை - ஹரின் பெர்னாண்டோ

#SriLanka #Tourist #Harin Fernando #Lanka4
Kanimoli
2 years ago
டயானா கமகேவுடன் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை - ஹரின் பெர்னாண்டோ

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுடன் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று (14) நடைபெற்ற அரசாங்க செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேள்வி – உங்களது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அவர்களின் பணிகளுக்கு உங்களிடமிருந்து எந்த ஆதரவும் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார். 

நீங்கள் இருக்கின்றீர்களா இல்லையா என்பதை கண்டறிய வழியே இல்லையா எனவும் டயனா கமகே கேள்வி எழுப்பி இருந்தாரே? “.. அவருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பெண்ணுடன் மோத விரும்பாததால், நான் அமைதி காத்து வருகிறேன், எனக்கு பைபாஸ் செய்யப்பட்டுள்ளது. அதனால் மன அழுத்தத்தை அதிகப்படுத்த வேண்டாம் என அமைதியாக இருக்கிறேன். தேவையற்றது என்பதால் நான் கேட்கவில்லை – பார்க்கவில்லை. அவரது பணிகளில் என்னால் எந்தத் தடையும் இல்லை. அவர் பத்தரமுல்லை அமைச்சில் உள்ளார். நான் அங்கு இல்லை.

 எனக்கு வழங்கப்பட்ட அமைச்சின் கட்டிடம் கொழும்பு உலக வர்த்தக மையத்தில் இருந்தது. அதற்கான கூலி 28 இலட்சம், நான் அங்கிருந்து மூன்று நாட்களில் விலகி ஹோட்டல் பாடசாலையில் ஒரு அறையிலேயே வேலை செய்தேன். சரி எதுவாக இருந்தாலும் அவருக்கு நான் அதில் உதவுவேன்..”எனத்தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!