சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்!

#SriLanka #PrimeMinister #China #Dinesh Gunawardena #Visit
Mayoorikka
2 years ago
சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்!

பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளார்.

 7வது சீனா-தெற்காசியா எக்ஸ்போ மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி ஆகியவற்றில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

 பிரதமருடன் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, ஜானக வக்கும்புர மற்றும் கனக ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் சீனாவுக்கு சென்றுள்ளனர்.

 நாளை முதல் முதல் 20 வரை சீனாவின் குன்மிங்கில் எக்ஸ்போ நடைபெறவுள்ளது. மேலும் பொது வளர்ச்சிக்கான ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு என்ற கருப்பொருளில் நடைபெறும் கண்காட்சியில் 60 நாடுகள் பங்கேற்க உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!