குருந்தூர்மலையில் நீதிமன்ற அனுமதியுடன் பொங்கல் நிகழ்வு!
#SriLanka
#Temple
#Mullaitivu
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பொங்கல் நடைபெறவுள்ளது.
நீதிமன்றின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படவுள்ள பொங்கல் நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த மாதம் 14ஆம் திகதி ஆதி சிவன் ஆலயத்தில் பொங்கல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
இந்தப் பொங்கலை தடுக்குமாறு குருந்தூர்மலை ரஜமகா விகாரை பிக்கு விடுத்த அழைப்பின்பேரில் கூடிய பெரும்பான்மையினத்தவர்களும் பொலிஸாரும் பொங்கலை தடுத்து நிறுத்தியிருந்தனர்.
ஆலயம் தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நடந்து வரும் நிலையில் கடந்த 8ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் மூலமாக பொங்கலை நடத்த அனுமதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.