வடகொரியாவின் நவீன ஆயுதங்களை அதிகப்படுத்துமாறு கிம் ஜாங் அன் உத்தரவு

#India #America #world_news #NorthKorea #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
வடகொரியாவின் நவீன ஆயுதங்களை அதிகப்படுத்துமாறு கிம் ஜாங் அன் உத்தரவு

அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் கொரிய தீபகற்ப பகுதியில் கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான போர் பயிற்சி மாத இறுதியில் நடைபெற உள்ளது. எனினும், இதனை போருக்கான நடைமுறை என கருதும் வடகொரியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் வடகொரியாவில் உள்ள வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அதிபர் கிம் ஜாங் அன் ஆய்வு செய்தார். அப்போது கவச வாகனங்கள், பீரங்கிகள் மற்றும் பலவற்றைக் கவனித்த அவர், ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். எனவே அவற்றை விரைந்து செய்து முடிக்க அவர் ராணுவத்துக்கு உத்தரவிட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!