சமஷ்டி கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம்! சம்பந்தன்
சமஷ்டி கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் எனவும் இந்த நிலைப்பாட்டில் சமரசம் அல்லது விட்டுக் கொடுப்பு செய்து கொள்ளாமல் அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாசைகளின் அடிப்படையிலும் மற்றும் தொடர்ந்து வந்த அரசுகளால் தீர்வுக்காக வழங்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளுக்கு இணங்கவும் தமிழ்த் தேசியப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையை விரைந்து முடிக்கவும் ஜனாதிபதியாகிய தங்களைக் கோருகின்றோம்.
அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.