மஹியங்கனையில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
மஹியங்கனய, கொலோனியா பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (14.08) மாலை பதிவாகியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஹியங்கனை 18 கொலனியில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தலையில் இரத்தம் தோய்ந்த துண்டுகள் காணப்பட்டதையடுத்து, இந்த மரணம் கொலையா அல்லது வேறு சம்பவமா என்பது தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.