மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க அரசாங்கம் தயாராகி வருவதாக குற்றச்சாட்டு
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார நுகர்வோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தியை உற்பத்தி செய்யும் தொழில் முயற்சியாளர்களிடம் குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் உள்ள நிலையில், தென் மாகாணத்திற்கு அதிக விலை கொடுத்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் மூலம் கமிஷன் பெற அதிகாரிகள் முயற்சித்துள்ளதாக மின்சார பயனீட்டாளர் சங்க தலைவர் எம்.டி.ஆர்.அதுல தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய அனல்மின் நிலையத்தை அரசாங்கம் கையகப்படுத்துவதற்கு அதிகாரம் இருந்த நிலையில், அவ்வாறு செய்யாத தரப்பினருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்யவுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர்.அதுல மேலும் தெரிவித்துள்ளார்.