நாட்டை விட்டு வெளியேறினார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
நாட்டை விட்டு வெளியேறினார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன!

பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.  

இதற்காக நேற்று (14.08) பிற்பகல் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பிரதமர்,  நாளை (16.08) முதல் 20 ஆம் திகதி வரை சீனாவின் குன்மிங் நகரில் நடைபெறவுள்ள சீனா தெற்காசிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வர்த்தக கண்காட்சியில் 60 நாடுகள் பங்குபற்றுவதுடன், பொதுவான அபிவிருத்திக்கான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் இக்கண்காட்சியின் கருப்பொருளாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!